இளையாத்தாங்குடி

பழமையும் பெருமையும் மிக்க நம் இளையாத்தங்குடி பண்டைய நாளிலும் அவ்வாறே அழைக்கப்பட்டு வந்துள்ளது. இத்தலத்திற்கு “சிவபுரம், பூகைலாயம், காமபிரபூரணபுரம், சித்தபுரம், புராதனவனம், நித்தியகல்வாணிபுரம், சிராமபநோதனபுரம்” என்னும் பல பெயர்களை கணேசபண்டிதர் இயற்றிய, இளசை புராணம் குறிக்கின்றது. மேலும் விசுவநாதர் ஐயர் இயற்றிய இளையாத்தாங்குடி மன்மியம் என்னும் நூலில் தேவர்களும், ரிஷிகளும் இத்தலத்திற்கு வருகை தந்ததாக கூறுகிறது. இத்தகைய தலபுராணங்களைப் பெற்ற பெருமை, நம் பெரிய கோவிலுக்கு உண்டு.

இளையாத்தாங்குடி உட்பிரிவு

இளையாத்தாங்குடி குலசேகரபுரத்தில்

  1. ஒக்கூருடையார்
  2. அரும்பாற்கிளையரான பட்டினசாமியார்
  3. பெருமருதுடையார்
  4. கழனிவாசக்குடியார்
  5. கிங்கிணிக்கூருடையார்
  6. பேரசெந்தூருடையார்
  7. சிறுசேத்தூருடையார்
இளையாத்தாங்குடி பட்டினசாமி

இளையதாங்குடியில் பெரிய கோயில் என்று சொல்லம் பெற்று வருகிற கைலாச நாதர் நித்தியகல்யாணி திருக்கோயில் வழிபாடு செய்கின்ற ஏழு வகையினரும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள பிரிவுகளை உருவாக்கிக்கொண்டனர். உட்பிரிவுக்கு தங்கள் வம்சாவழியில் தங்களுக்கு சில காலம் முன்பு வாழ்ந்த மிகப் பெரிய ஞானியான பட்டினத்தார் பெயரை தங்களின் பிரிவுக்கு வைத்துக் கொண்டு, அதுமுதல் இளையதாங்குடி பட்டினசாமி நகரத்தார் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். மேலும் தெரிய